வங்கி அட்டைகளை பயன்படுத்தி பேருந்து கட்டணம் செலுத்த அனுமதி
நவம்பர் 30, 2025 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், டிக்கெட் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட பேருந்துகளில் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பயணிகள் பேருந்து கட்டணங்களைச் செலுத்த அனுமதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பணம் செலுத்தும் முறை
"பேருந்து டிக்கெட்டுகள் திருடப்படுகின்றது என்பது அனைவரும் அறிந்த உண்மை. இலங்கையில் பேருந்துத் துறை இயங்க முடியாததற்கு அதுவே முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
இதன் காரணமாக எந்த வருமானத்தையும் ஈட்ட முடியாது. எனவே, அட்டை கட்டண முறையை உருவாக்குமாறு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்களிடமிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, நவம்பர் 30 ஆம் திகதிக்குள், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு சான்றிதழை வழங்கியிருக்கும் என்று நம்புகிறோம்.
இதற்கமைய, தற்போது பேருந்து டிக்கெட் இயந்திரம் உள்ள எந்தவொரு பேருந்திலும் பயணிகள் தங்களிடம் உள்ள எந்த வங்கி அட்டையையும் பயன்படுத்தி பணம் செலுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri