வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டை தனக்கும் கோரியுள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
இந்த ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டை தனக்கும் ஒதுக்கித் தருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) கோரியுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் (Vino Noharathalingam) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
"2024ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும், மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட போதும் எனக்கு வழங்கப்படவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
எனவே, கடந்த ஞாயிற்றுக்கிழமை (26) முல்லைத்தீவு (Mulliativu) - புதுக்குடியிருப்பில் காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வுக்கு வருகை தந்திருந்த ஜனாதிபதியிடம் மன்னார் (Mannar) மற்றும் வவுனியா (Vavuniya) மாவட்டங்களுக்கென முன்மொழியப்பட்ட திட்டங்களுக்கு அனுமதி வழங்குமாறு கோரியிருந்தேன்.

இதன்போது, ஜனாதிபதி அவரின் உதவிச் செயலாளரை அழைத்து ஏன் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனக் கேட்டதுடன், நிதி ஒதுக்கீட்டுக்கு ஏற்பாடு செய்யுமாறும் அறிவுரை வழங்கியிருந்தார்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐம்பது மில்லியன் ரூபா நிதி அபிவிருத்தி திட்டங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட போதும் சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித நிதியும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan