அமெரிக்க தூதுவருடனான சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட தேர்தல்கள் ஆணையாளர்
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ( Julie Chung) உடனான கலந்துரையாடல் ஒரு சாதாரணமானது என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க (R.M.A.L. Ratnayake) தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தேர்தல் நடைமுறைகள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுடன் கலந்துரையாடிதன் மூலம் அமெரிக்கத் தூதுவர், உள்நாட்டு விடயத்தில் தலையிட்டதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையிலேயே ஆணையாளர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்
கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில், தேர்தல் ஆணையத்தால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட செப்டெம்பர் 17 மற்றும் ஒக்டோபர் 16ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் தேர்தல் நடத்தப்படுமா என ஜூலி சங் கேட்டுள்ளதாக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சந்திப்பு
தேர்தல் செயல்முறை குறித்து விவாதித்தமையே கூட்டத்தின் மையப் புள்ளி என்றும் தேர்தல் திட்டங்கள் தொடர்பில் இதன்போது விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
எனினும், 30 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த சந்திப்பில் தீவிரமான அல்லது தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் எதுவும் விவாதிக்கப்படவில்லை என்பதோடு இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு மாத்திரமே என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த சந்திப்புக்கான அனுமதி இரண்டு வாரங்களுக்கு முன்னரே பெறப்பட்டதாகவும் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |