உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு
மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுக்கு தலைமை தாங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது இணை உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு, அந்தந்த பகுதிகளின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
இந்த முன்மொழிவின் படி, மாவட்ட அபிவிருத்தி குழுவுக்குத் தலைமை வகிக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு 100மில்லியன் ரூபாவும் இணை உறுப்பினர்களுக்கு 50 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படவுள்ளன.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரண்டையும் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுக்கு தலா 2 மில்லியன் ரூபாவும், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர்களுக்கு தலா 4 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும், என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஒரு வருடத்திற்குள் முடிக்கக்கூடிய திட்டங்களுக்கு, இந்த நிதி ஒதுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் உள்ளூராட்சி தேர்தல்கள் திட்டமிடப்பட்டிருந்தாலும், தேர்தல்கள் சில மாதங்கள் தாமதமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri