வீதிகளை புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை
இலங்கையில் தற்போதுள்ள வீதி வலையமைப்பின் மோசமான நிலையைக் கருத்தில் கொண்டு, வீதிகளை பழுதுபார்ப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அரசாங்கத்தை வலியுறுத்தி உள்ளது.
இந்த பராமரிப்பு செயற்றிட்டத்திற்காக சுமார் 20 பில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த தேவை குறித்து அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டதாகவும், ஆனால் இதுவரை ஒதுக்கீடுகள் செய்யப்படாததால் அமைச்சு புதிய முறையீடு செய்யவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், நாட்டில் 12,000 கிலோ மீட்டர் வீதிகளில் ஏராளமான திட்டங்கள் மற்றும் பராமரிப்பு பணிகள் முடங்கியுள்ளன.
இதில், இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள 235 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்ட ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டமும் ஒன்றாகும் என கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |