இலங்கைக்குள் நுழைந்த இந்திய படகுகள்
தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் கால வரையறை அற்ற போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில் நேற்றும், இன்றும் 40க்கும் மேற்பட்ட இந்திய இழுவை மடி படகுகள் வெற்றிலை கேணி கடற்கரையிலிருந்து சுமார் 2km தூரம் வரை வந்து சென்றுள்ளதாக வடமராட்சிக் கிழக்கு வெற்றிலை கேணி கடற்றொழிலாளர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.
மேலும், எல்லை தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், இலங்கையில் கைது செய்யப்பட்டு தண்டனைக்கு உட்பட்டிருக்கின்ற கடற்றொழிலாளர்களை விடுவிக்குமாறு கோரி இந்தியா தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் கால வரையறை அற்ற போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றும், இன்றும் 40க்கும் மேற்பட்ட இந்திய இழுவை மடி படகுகள் கடற்கரையிலிருந்து சுமார் 2km தூரம் வரை வந்து செல்வதாக வடமராட்சிக் கிழக்கு வெற்றிலை கேணி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இழப்பீடு கோரிக்கை
இதேவேளை நேற்று முன்தினம் தமக்கு சுமார் 30 இலட்சத்திற்க்கு மேற்பட்ட பெறுமதியான வலைகளை இந்திய இழுவை படகுகள் நாசம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், மற்றும் பிரதேச செயலகம் உட்பட பல இடங்களிலும் இழப்பீடு பெற்று தருமாறு கோரி கடிதம் வழங்கியதாகவும் எனினும்அனைவரும் இழப்பீடு பெற்று தருவதாக கூறியும் இதுவரை எந்தவிதமான இழப்பீடுகளையும் பெற்று தரவில்லை என்றும் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும், 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்றதற்கு பின்னர் தமக்கு பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் இந்திய ரோலர்களால் அழிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர்கள், தாம் தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கு பெரிதும் சிரமப்படுவதாகவும் கூறியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan