பொதுமக்கள் மீதான தாக்குதலை அனுமதித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி: கஜேந்திரன் எம்.பி ஆதங்கம்
நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொதுமக்கள் மீதான தாக்குதலை அனுமதிக்கின்றார் என்றால் அவரிடம் ஒரு மனநோய் இருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், அப்படிப்பட்ட அவர் இனவெறி, மதவெறி, பாலினம் சார்ந்த மனநோய்க்கு உட்பட்டவரா என்ற கேள்வி எழுகின்றது எனவும் கூறியுள்ளார்.
வவுனியா - வெடுக்குநாறி மலை ஆதிசிவனார் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் விடுவிக்கக்கோரி மேற்கொள்ளப்பட்ட வவுனியாவில் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
மிருக குண்ம் கொண்டஒருவரால் கைது செய்யப்ப்ட்ட 8 பேரும் மறுநாள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட பின்னர்தான் குற்றச்சாட்டுக்களை தேடிப் பிடித்தார்கள்.
தொல்பொருள் சின்னம் எவற்றுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. பொய்யான அடிப்படையில் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளரிடம் அறிக்கை பெற்று அவர்களைது பிணையை நிறுத்தியுள்ளார்கள்.
தொல்பொருள் அமைச்சரும் சூத்திரதாரி
வெடுக்குநாறி மலையை சைவர்களிடம் இருந்து பறித்து எடுப்பதற்கான முயற்சியே நடைபெறுகிறது.
தொல்பொருள் அமைச்சரும் இதன் சூத்திரதாரியாக இருந்து செயற்படுகின்றார். அவர் இனவெறிச் செயற்பாட்டை கடந்த காலங்களில் மேற்கொண்டவர்.
குருந்தூர் மலையில் அகழ்வு செய்யப் போகின்றோம் எனப் பொய் சொல்லி அங்கு பௌத்த விகாரையை நிறுவியவர். அதற்கு முழு சூத்திரதாரி விதுர விக்கிரமநாயக்க என்ற தொல்பொருள் அமைச்சர்" என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |