அகில இலங்கை கர்நாடக சங்கீதப்போட்டியில் மட்டக்களப்பு மாணவர்கள் சாதனை
அகில இலங்கை கர்நாடக சங்கீதப்போட்டியில் மட்டக்களப்பு (Batticaloa) மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
திருகோணமலையில் நேற்றைய தினம் (09) நடைபெற்ற அகில இலங்கை கர்நாடக சங்கீதப்போட்டியின் தேசிய மட்டப் போட்டியில் திறந்த குழு இசை மற்றும் இரண்டு தனியிசை போட்டிகளில் பங்குபற்றியிருந்தது.
மாவட்ட, மாகாண மட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்று இந்த தேசிய போட்டியில் மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
சிறந்த பயிற்சி
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முன்னாள் சங்கீத ஆசிரியை தேனக இசைச்சுடர் சாந்தினி தர்மநாதனின் பயிற்றுவிப்பில் இந்த மாணவர்கள் போட்டிகளில் பங்குபற்றியிருந்தனர்.
இதனடிப்படையில் அகில இலங்கை கர்நாடக சங்கீதப்போட்டியில் குழு இசை தேசியத்தில் முதல் இடத்தினையும் ஜாவளி தனியிசையில் இரண்டாம் இடத்தினையும் திருப்புகழ் தனியிசையில் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.