சீனாவில் ஏற்பட்ட வாகன விபத்தில் 35 பேர் பலி
சீனாவில் (China), ஓட்டுநர் ஒருவர் மக்கள் கூட்டத்தின் மீது, தமது சிற்றூந்தை மோதியதில் குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
தென்கிழக்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் நேற்று (11) இரவு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜுஹாய் என்ற இடத்தில் உள்ள விளையாட்டு மையத்திற்கு வெளியே உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீதே குறித்த ஓட்டுநர், தமது சிற்றூந்தை செலுத்தியுள்ளார்.
தப்பியோட முயற்சி
இந்த சம்பவத்தை அடுத்து 62 வயதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கைது செய்ய முற்பட்ட போது அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓட முயன்றதாகவும் அதன்போது அவர் சுயமாக ஏற்படுத்திக்கொண்ட காயங்களால் இப்போது கோமா நிலையில் உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவில் ஆபத்தான போக்குவரத்து விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன, குறைவான பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் பரவலான ஒழுங்கற்ற வாகன ஓட்டுதல்களே இந்த விபத்துக்களுக்கு காரணங்களாகும் என்று அந்நாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
