கொழும்பிலிருந்து சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த கதி - மனைவி பலி - கணவன், பிள்ளைகள் படுகாயம்
களுத்துறை, மொரகஹஹேன கோணபொல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் உயிரிழந்த நிலையில் கணவன் மற்றும் பிள்ளைகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாளை மறுதினம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தனது இரண்டு பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் கிராமத்திற்கு முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது, லொறியுடன் இன்று பிற்பகல் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
பெத்தேவத்தை, மித்தெனிய பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான சம்பிகா உதயங்கனி என்ற 34 வயதான பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மனைவி பலி
அவரது கணவர் மற்றும் 7 வயது மகன் மற்றும் 4 வயது மகள் ஆகியோர் படுகாயமடைந்து களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான குடும்பத்தினர் பிலியந்தலை பிரதேசத்தில் தற்காலிகமாக வசிப்பவர்கள் எனவும் பொதுத் தேர்தலுக்காக வாக்களிப்பதற்காக கிராமத்திற்கு சென்று கொண்டிருந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குடும்பத்தை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி கெஸ்பேவயிலிருந்து ஹொரணை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, ஹொரணையிலிருந்து எதிர்திசையில் இருந்து வந்த லொறி ஒன்று முச்சக்கரவண்டி மீது மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்திற்கு காரணம்
விபத்தில் படுகாயமடைந்தவர்களை பிரதேசவாசிகள் கஹதுடுவ வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், பெண் உயிரிழந்துள்ளதாகவும் ஏனையவர்களுக்கு உடனடியாக அடிப்படை சிகிச்சை அளிக்கப்பட்டு களுபோவில போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

சாரதிகள் இருவரும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையே விபத்திற்கு காரணம் என இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
மீண்டும் வந்த கதிர், ஞானம்.. அதிர்ச்சியில் ஜனனி மற்றும் பெண்கள்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. Cineulagam