பொதுத் தேர்தலில் போட்டியிடும் யாழ். வேட்பாளர் அதிரடியாக கைது
பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் வைத்து 49 வயதான நபர் இன்று செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாவகச்சேரி பிரதேசத்தில் வசிக்கும் நபரொருவர் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதி மோசடி
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் என தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர் வெளிநாடு ஒன்றுக்கு அனுப்புவதாக கூறி சுமார் ஐந்து இலட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri