மட்டக்களப்பில் தேர்தல் அறிக்கையிடல் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி
தேர்தல் அறிக்கையிடல் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கான முழுநாள் பயிற்சிநெறி மட்டக்களப்பு சுற்றுலாவிடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
இந்த பயிற்சி நிகழ்வானது, நேற்று (09.112024) நடைபெற்றுள்ளது.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் நடாத்தப்பட்ட இப்பயிற்சிநெறியில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
முக்கிய விடயங்கள்
இதன்போது, இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தைச் சேர்ந்த எம்.என். ராஜா, ஆனந்த.டி.ஜெயசேகர, சட்டத்தரணி குகதாஸன் ஐங்கரன், விடிவெள்ளி பத்திரிகை ஆசிரியர் முகமட். பைறூஸ், ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு விளக்கங்களையும், தொழிவூட்டல்களையும் ஊடகவியலாளர்களுக்கு வழங்கினர்.

மேலும், தேர்தல்களின் போது ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் ஊடகங்களின் பங்கு, தேர்தல்களின் போது ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் ஊடகங்களின் பங்கு, தேர்தல்களின் போது நெறிமுறை கோவையை உறுதி செய்வதிலும், உண்மைச் சரிபார்ப்பதன் பங்குகள், கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஊடக அவதானிப்புக்கள் தொடர்பான விடயங்கள், உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் விரிவாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டன.
அத்துடன், பயிற்சியில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.










மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பழனியாக நடிக்கும் ராஜ்குமாரின் மனைவி, குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?... இதோ Cineulagam
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri