வவுனியாவில் பயங்கரம் : மண்வெட்டியால் தாக்கி பெண் படுகொலை
வவுனியா (Vavuniya), ஈச்சங்குளம் பகுதியில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (09) மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஈச்சங்குளம், அம்மிவைத்தான் பகுதியில் உள்ள தனது வீட்டில் மேற்படி பெண் தனிமையில் இருந்துள்ளார்.
இதன்போது அங்கு அத்துமீறி வந்த இளைஞர் ஒருவர் அந்தப் பெண் மீது மண்வெட்டியைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளார்.
பொலிஸார் விசாரணை
இதனால் படுகாயமடைந்த பெண் நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், அவர் வைத்தியசாலைக்குக் கொண்டு வருவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் ஈச்சங்குளம் பகுதியை சேர்ந்த வெற்றிமலர் (வயது 57) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
தாக்குதலை மேற்கொண்ட நபர் தப்பிச் சென்றுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
இந்தியாவுக்கு வரும் புடின்: விமானத்தில் கொண்டு வரப்பட்ட Aurus Senat கார்! மிரட்டும் தனித்துவம் News Lankasri