மக்களிடத்தில் மாற்றத்தைக் கோரும் பிரதமர்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சித்தாந்தத்திற்கு ஏற்ற நாடாளுமன்றம் இந்த பொதுத் தேர்தலில் உருவாக்கப்பட வேண்டுமென பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
ஹோமாகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொதுமக்கள் ஏற்படுத்த வேண்டிய மாற்றம்
நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) பிரதிநிதித்துவப்படுத்தும் சித்தாந்தத்துக்கும் அரசியல் மாற்றத்துக்கும் பொருத்தமானவர்கள் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தை உருவாக்க வேண்டும்.
அந்த மாற்றத்தை பொதுமக்கள் ஏற்படுத்த வேண்டும்.
நாட்டுக்கு பொருத்தமான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து புதிய அரசாங்கத்தில் எங்களது வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளோம்
மேலும், நாடாளுமன்ற தேர்தலில் எங்களின் வெற்றி எண்ணிக்கையில் மட்டுமல்ல, தரத்திலும் உள்ளது.
திருடர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதன் மூலம் நாட்டில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
