ரணிலுக்கு ஆதரவளித்த கட்சிகள் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டி
கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளித்த அரசியல் கட்சிகள் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளன.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இவ்வாறு எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் குறித்த கட்சிகள் போட்டியிட உள்ளன.
புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் இந்த கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளன.
34 அரசியல் கட்சிகள்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து இறுதித் தீர்மானத்தை எட்டும் நோக்கில் இன்று கொழும்பில் விசேட சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதன் போது எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் கட்சிகள் போட்டியிடத் தீர்மானித்துள்ளன.
மேலும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் 34 அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam