ஜம்மியத்துல் உலமாவுடன் சந்திப்பை நடத்திய சர்வஜன அதிகாரம் கட்சி
நாட்டில் உள்ள அனைத்து இன மற்றும் மத சமூகங்களுடனும் இணைந்து பணியாற்றுவதன் மூலம் தேசிய ஒற்றுமையை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை, சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜெயவீர வலியுறுத்தியுள்ளார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்பின் பிரதிநிதிகளுடன் நேற்று (25) நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னர் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து, மிகவும் பயனுள்ள கலந்துரையாடலை நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கட்சிகள்
சகவாழ்வு என்ற கருத்தை வெவ்வேறு அரசியல் கட்சிகள் எவ்வாறு விளக்குகின்றன மற்றும் பயன்படுத்துகின்றன என்பது குறித்தும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ,பல்வேறு அரசியல் கட்சிகள் 'சகவாழ்வு' என்ற வார்த்தையை தங்கள் சொந்த நலனுக்காகப் பயன்படுத்துகின்றன.
சமூகங்களிடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதாகக் கூறுகின்றன. இருப்பினும், சகவாழ்வுக்கான வெளிநாட்டுக் கருத்துக்களை இறக்குமதி செய்வதன் மூலம் இலங்கையர்கள் முன்னேற முடியாது.
திறந்த விவாதம்
அதற்கு பதிலாக, தேசிய அடையாளம், இலங்கை நாகரிகத்தின் மீது கட்டமைக்கப்பட வேண்டும், இதற்காக அனைத்து இனக்குழுக்களும் மரியாதை மற்றும் ஒற்றுமையுடன் பணியாற்றவேண்டும்.
எனவே இலங்கையில் தேசிய மற்றும் மத நல்லிணக்கம் குறித்த திறந்த விவாதங்களில் ஈடுபடுவதற்கு தாம் உறுதி பூண்டுள்ளதாக ஜெயவீர கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

£4.75 மில்லியன் மதிப்புள்ள 18 காரட் தங்க கழிப்பறை: துணிகர திருட்டின் சிசிடிவி காட்சிகள்! News Lankasri

ட்ரம்ப் முன்வைத்த ஒப்பந்தத்துக்கு சம்மதித்தார் உக்ரைன் ஜனாதிபதி: விரைவில் கையெழுத்தாகலாம் News Lankasri

தப்பிக்க நினைத்து முத்துவின் கண்ணில் பட்ட ரோஹினி மாமா, இனி நடக்கப்போவது என்ன?- சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
