கைது செய்யப்பட்ட 21 பேரும் பிணையில் செல்ல அனுமதி: கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம்
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது இன்று காலை கைது செய்யப்பட்ட 21 பேருக்கும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
நிதி அமைச்சின் இரண்டு நுழைவாயில்களை அடைத்து காலி முகத்திடல் போராட்டக்காரர்களால் கட்டப்பட்ட இரண்டு கூடாரங்கள் இன்று காலை பொலிஸாரால் அகற்றப்பட்டன.
அப்போது அந்த இடத்தில் பரபரப்பான சூழ்நிலை உருவானதுடன், 21 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நான்கு பெண்களும் 16 ஆண்களும் அடங்கியிருந்தனர்.
| பிறந்த நாளை கொண்டாடும் கோட்டாபய ராஜபக்ச! குவிக்கப்பட்டுள்ள பெருமளவான இராணுவத்தினர் |


காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று இரவு இந்த நுழைவாயில்களுக்கு முன்பாக கூடாரங்களை அமைத்துள்ளது, இதனால் அத்தியாவசிய சேவைகளுக்கு அறிக்கை செய்யும் அதிகாரிகளும் பல்வேறு நோக்கங்களுக்காக வந்த பொதுமக்களும் வளாகத்திற்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது.
எனினும் இன்று காலை பொலிசார் கூடாரங்களை அகற்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். சமூக ஆர்வலர்களான அனுருத்த பண்டார, இசுரு வர்ணகுலசூரிய மற்றும் அர்ஜுன ராஜபக்ஷ ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலதிக செய்தி: அனாதி

மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri