2026இல் பூமிக்கு வேற்றுகிரகவாசிகள்.. பாபா வங்காவின் கணிப்பு!
எதிர்வரும் 2026ஆம் ஆண்டில் வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வருவார்கள் என பாபா வங்கா கணித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக விண்வெளியில் தெரியும் '3I/ATLAS' என்ற மர்மப் பொருள் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
பூமிக்கு மிக அருகில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படும் இந்த பொருள், விஞ்ஞானிகளின் அனைத்து வகைப்பாடுகளையும் மீறியுள்ளது.
பூமிக்கு அச்சுறுத்தல் இல்லை
இந்நிலையில், இது இயற்கையான விண்வெளி பொருள் இல்லை எனவும் இது வேற்றுக்கிரகவாசிகளின் தொழில்நுட்ப கண்டுபிடிப்பான விண்கலமாக இருக்கலாம் எனவும் ஹார்வர்ட் பல்கலைக்கழக வானியற்பியலாளர் தெரிவித்துள்ளார்.

33 பில்லியன் டன் எடையுடன் உள்ள இந்த மர்மப் பொருள், அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரின் அளவுக்கு மிகப்பெரியதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது, டிசம்பர் 19ஆம் திகதி பூமிக்கு அருகில் வரும் என்று நாசா அறிவித்துள்ளது. எனினும், இந்தப் பொருள் பூமியில் இருந்து சுமார் 240 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் என்பதால் பூமிக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் ஏற்படாது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறிருக்க, பல்கேரியாவைச் சேர்ந்த மறைந்த தீர்க்கதரிசியான பாபா வங்கா, 2026ஆம் ஆண்டில் வேற்றுக்கிரகவாசிகள் தோன்றுவார்கள் என கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri