ஈரான் ஜனாதிபதியின் இறுதிச் சடங்கில் பங்கேற்கவுள்ள இலங்கை அமைச்சர்
உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த ஈரான் (Iran) ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் (Ebrahim Raisi) இறுதிச் சடங்கில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) கலந்துகொள்ளவுள்ளார்.
அதற்கமைய, அவர் இன்று (21.05.2024) இரவு நாட்டை விட்டு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் ஜனாதிபதியின் மரணம் தொடர்பில் இந்நாட்டு அரசியல்வாதிகள் மற்றும் ஏனைய மக்கள் இந்நாட்டிலுள்ள ஈரான் தூதரகத்தில் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
அரைக்கம்பத்தில் தேசியக் கொடி
அதேவேளை, ஈரானிய ஜனாதிபதி மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சருக்கான இறுதி ஊர்வலம் வடமேற்கு ஈரானில் இன்று ஆரம்பமாகியது.
மேலும், ஈரானில் 5 நாட்களுக்கு துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதோடு இலங்கை உட்பட பல்வேறு நாடுகளிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan

தோட்டத்தில் புல் வெட்டியதற்காக வெளிநாட்டவருக்கு குடியுரிமை மறுப்பு: சுவிஸ் நீதிமன்றம் அதிரடி News Lankasri

தமிழ் புத்தாண்டு இந்த 3 ராசியினரை கோடீஸ்வரராக மாற்றப்போகுதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

2 முறை யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி.. முதலில் ஐபிஎஸ் ஆகி பின்னர் ஐஏஎஸ் அதிகாரியான நபர் யார்? News Lankasri
