ஈரானிய ஜனாதிபதியின் இறுதி சடங்கில் பங்கேற்கவுள்ள புடின்
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் (Ebrahim Raisi) இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) ஈரானுக்கு செல்லவுள்ளதாக சர்வதேச ஊடகங்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ரஷ்ய (Russia) ஜனாதிபதி புடின், சுகோய் - 35 (Sukhoi-35) எனப்படும் 4 விமானங்களின் துணையுடன் ஈரானுக்கு பயணிக்கவுள்ளார்.
அரசியல் சேவை
அதேவேளை, புடின், உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த இப்ராஹிம் ரைசியின் மரணம் குறித்த இரங்கல் செய்தி ஒன்றை ஈரானுக்கு அனுப்பியிருந்தார்.
குறித்த செய்தியில் அவர்,
"ரைசி தனது தாய்நாட்டிற்கு சேவை செய்வதில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தார்.
மேலும், அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி என்பதால் அவரது முழு வாழ்க்கையையும் தாய்நாட்டிற்கு சேவை செய்வதற்கே அர்ப்பணித்தார்.
ரஷ்ய - ஈரான் உறவு
அது மாத்திரமன்றி, அவர் தனது நண்பர்களின் உயர்ந்த மரியாதையையும் பிற நாடுகளில் கணிசமான கௌரவத்தையும் சரியாக பேணி வந்தார்.
அதேவேளை, ரஷ்யாவின் உண்மையான நண்பராக திகழ்ந்ததுடன் தமது நாடுகளுக்கிடையேயான சிறந்த அண்டை நாடுகளின் உறவுகளை மேம்படுத்துவதற்கும் விலைமதிப்பற்ற தனிப்பட்ட பங்களிப்பைச் செய்தார்.
மேலும், அவற்றை மூலோபாய கூட்டாண்மை நிலைக்கு கொண்டுவர பெரும் முயற்சிகளை மேற்கொண்டார்” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |