அா்ஜூன் மஹேந்திரனை கழுத்தை பிடித்துக் கொண்டு வரமுடியும் என்று கூறவில்லை : நீதியமைச்சா்
இலங்கை மத்திய வங்கியின் முறி மோசடி தொடா்பான முக்கிய பிரதிவாதியான, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநா் அர்ஜூன் மஹேந்திரனை நாடு கடத்துமாறு விடுக்கப்பட்ட கோாிக்கைக்கு சிங்கப்பூரின் சட்டமா அதிபா் இன்னும் பதில் வழங்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் தொிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் நீதியமைச்சா் அலி சப்ரி இதனை தெரிவித்துள்ளாா்.
எனவே அவா் இல்லாமலேயே இந்த வழக்கின் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.
முன்னதாக அர்ஜூன் மஹேந்திரனை நாடு கடத்துமாறு சிங்கப்பூரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டபோது, அவரது பெயரை மாற்றிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதன்பின்னா், இலங்கை அரசாங்கத்தினால் மீள்கோாிக்கை விடுக்கப்பட்டபோதும் இதுவரை சிங்கப்பூர் அரசாங்கம் பதில் வழங்கவில்லை என்று சப்ரி குறிப்பிட்டாா்.
இந்த நிலையில் அவரை கழுத்தை மற்றும் காதைப் பிடித்து இழுத்து வரமுடியும் என்று யாரும் கூறவில்லை.
இது யாரும் பொதுக்கூட்டங்களில் கூறியிருக்கமுடியும் எனினும் இவ்வாறான விடயங்களுக்கு உாிய நியதிகள் உள்ளன என்றும் அலி சப்ரி தொிவித்தாா்.