அலி கமெனி வெளியிட்ட பதிவு.. மத்திய கிழக்கில் தீவிரநிலையில் போர்பதற்றம்!
புதிய இணைப்பு
அலி கமெனி தற்போது ஆற்றும் உரையில், "நாட்டின் தலைவர்கள், ஜனாதிபதி உள்ளிட்டவர்களை இவ்வளவு முக்கியமான சர்வதேச மற்றும் உள்நாட்டு சூழ்நிலையில் அவமதிப்பதை நான் கடுமையாகத் தவிர்க்கிறேன்.
இத்தகைய செயற்பாடுகளை நான் அனுமதிக்கவும் மாட்டேன், ஏற்கவும் மாட்டேன், தடை செய்கிறேன். இதனைச் செய்பவர்கள் நாடாளுமன்றத்தில் இருப்பவர்களாக இருந்தாலும், வெளியே இருப்பவர்களாக இருந்தாலும், எங்கு இருந்தாலும் அது ஏற்றுக்கொள்ள முடியாததே" என குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில் சற்று முன்னர் அலி கமெனி வெளியிட்ட பதிவு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானிய உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமெனி, தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் ட்ரம்பை குற்றவாளி என குறிப்பிட்டு பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
குறித்த பதிவில், "ஈரானிய தேசத்தின் மீது இழைத்த உயிரிழப்புகள், சேதங்கள் மற்றும் அவதூறுகள் காரணமாக அமெரிக்க ஜனாதிபதியை ஒரு குற்றவாளியாக நாங்கள் கருதுகிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.
மோசமான பதிலடி
ஈரானில் அதிகரித்து வரும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு மத்தியில் ட்ரம்பின் அச்சுறுத்தலும் அந்நாட்டை பதற்றத்திற்கு உள்ளாக்கி வருகின்றது.

ஈரான், போராட்டத்தை கட்டுப்படுத்த போராட்டக்காரர்களை தாக்கினால் மிக மோசமான விளைவுகளை எதிர்நோக்கும் என ட்ரம்ப் நிர்வாகம் எச்சரித்து வருகின்றது.
ما رئیسجمهور آمریکا را به دلیل تلفات، خسارات و تهمتی که به ملت ایران زد، مجرم میدانیم pic.twitter.com/JKwUH1qxtu
— KHAMENEI.IR | فارسی (@Khamenei_fa) January 17, 2026
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா, ஈரானின் அணுசக்தி நிலையத்தின் மீது நடத்திய தாக்குதலுக்கும் 2020இல் அதன் உயர்மட்ட ஜெனரல் காசிம் சுலைமானியின் படுகொலைக்கு பெரும்பாலும் அடையாளப்பூர்வமான பதிலை வழங்குவதைப் போலல்லாமல், மிக கொடூரமான தாக்குதலை நடத்தும் என தெரிவித்துள்ளது.
Iran's Khamenei:
— Clash Report (@clashreport) January 17, 2026
This was an American sedition. The Americans planned it, they worked on it.
America’s goal — I say this decisively and clearly — America’s goal is to swallow Iran.
This isn’t about the current US President. This is American policy.
We consider the US… pic.twitter.com/41UkJibL2l
இதற்கிடையில், ட்ரம்பை குற்றவாளி என ஈரான் அடையாளப்படுத்தி அலி கமெனி வெளியிட்டுள்ள பதிவு போர்பதற்றத்தை இன்னும் அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.