நீரிழிவு நோயுள்ள தாய்மாருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள அபாய நிலை
கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோயை எதிர்கொள்ளும் தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள் பிற்காலத்தில் நீரிழிவு உள்ளிட்ட தொற்றா நோய் உள்ளவர்களாக பிறக்கும் அபாயத்தில் உள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரும், நீரிழிவு மற்றும் நாளமில்லா சுரப்பியியல் ஆலோசகருமான வைத்தியர் மணில்கா சுமனதிலக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் சுமார் 13.9 சதவீத தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தின் போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. கர்ப்பகால நீரிழிவு நோயானது கர்ப்பத்திற்கு முன்பு அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பது மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் ஏற்படுகிறது.
ஏற்பட்டுள்ள அபாயம்
கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோயை எதிர்கொள்ளும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள், பிற்காலத்தில் நீரிழிவு உள்ளிட்ட தொற்றாத நோய்கள் உள்ளவர்களாக பிறக்கும் அபாயத்தில் உள்ளனர்.

அதிக எடை அல்லது பருமனான பெண்கள் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலமும், வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதன் மூலமும் கர்ப்பத்திற்கு முன்பு தங்கள் அதிகப்படியான உடல் எடையை சுமார் 7 முதல் 10 சதவீதம் வரை குறைக்க முடிந்தால், இந்த ஆபத்தை கணிசமாகக் குறைக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan