ஆலையடிவேம்பு கண்டக்குழி குளத்தை அபகரிக்க முயற்சி! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை (Photos)
அம்பாறை- ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள கண்டக்குழி குளத்தில் மண் நிரப்பி குளத்தை அபகரிக்கும் செயற்பாட்டில் சிலர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகி்ன்றது.
ஆலையடிவேம்பு கண்டக்குழி குளத்தில் நபரொருவர் இன்று (26.04.2023) மண் நிரப்பி குளத்தை அபகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்ட போது, பிரதேச செயலாளர் வி.பாபகரன் தடுத்து நிறுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பிரதேச செயலகத்தின் கீழ் பொத்துவில் அக்கரைப்பற்று பிரதான வீதியிலுள்ள இந்து மயானத்துக்கு எதிராகவுள்ள கண்டக்குழி குளத்திலிருந்து அப்பகுதி விவசாயிகள் வயல் நிலங்களுக்கு நீரை பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில் கடந்த யுத்த சூழல் காலத்தில் அந்த பகுதியில் விசேட அதிரடிப்படை முகாம் அமைந்திருந்த நிலையில் தமிழ் மக்கள் அங்கு செல்லமுடியாத சூழல் ஏற்பட்டது.
இதனால், ஒரு தரப்பினர் குளத்தின் ஒரு பகுதியை அபகரித்துள்ளனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கடந்த 2010ஆம் ஆண்டு குளம் 10 இலட்சம் ரூபா செலவில் பிரதேச செயலகத்தினால் புனரமைக்கப்பட்டது.
இந்நிலையில், கண்டகுழி குளத்தின் ஒரு பகுதியினை திடீரென அந்த பகுதியை சேராத நபரொருவர் கனரக வாகனத்தில் மண்ணை கொண்டுவந்து கொட்டி குளத்தை நிரப்பும் செயற்பாட்டில் ஈடுபடுவதை பொதுமக்கள் பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து உடனடியாக பிரதேச செயலாளர் சென்று குள அபகரிப்பதை தடுத்து நிறுத்தியுள்ளார்.
மேலும், குளத்தின் அருகிலுள்ள அரிசி ஆலை ஒன்றில் இருந்து கழிவான உமிகளும் குளத்தினுள் கொட்டப்பட்டுவருவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.








விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் போட்டியாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் ஆண்டனி... சந்தோஷத்தில் போட்டியாளர், வீடியோ Cineulagam

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
