சாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறுபேறுகளை நிறுத்தியமை பாரிய துரோகம்: ரிஷாட் காட்டம்
திருகோணமலை சாஹிரா கல்லுாரி மாணவிகளின் உயர்தரப் பெறுபேறுகளை பெறுபேறுகளை நிறுத்தி இருப்பது பாரிய துரோகம் என்றும், அதனை உடனடியாக வெளியிடும் எனவும், ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சரிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்(Rishad Bathiudeen) சபையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்றைய தினம் (04) நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், மேலு கூறியதாவது,
“பெண்களின் உரிமைகள் மற்றும் வலுவூட்டல் தொடர்பான சட்டமூலத்தை கொண்டுவந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இதற்காக உழைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்திய கலாநிதி சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே, தலதா அத்துகோரள, ரோகிணி கவிரத்ன, கீதா குமாரசிங்க ஆகியோருக்கு நன்றிகள் உரித்தாகட்டும்.
சிறந்த முறையில் ஆட்சி
இந்த நாட்டின் பிரதமராக மற்றும் ஜனாதிபதியாக பெண்கள் இருந்திருக்கின்றனர்.
உலகத்துக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து, சிறந்த முறையில் ஆட்சி செய்திருக்கின்றார்கள். எனினும், தற்போது நமது நாட்டில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள், துன்புறுத்தல்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
எமது இஸ்லாம் மார்க்கத்தில், பெண்களின் உரிமை தொடர்பில் மிகவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களின் பாதுகாப்பு தொடர்பிலும் கண்டிப்பான, கரிசனை காட்டியிருக்கின்றது. எனினும், சர்வதேச நாடுகளில் இஸ்லாம் மீதான அபாண்டங்கள் பரப்பப்படுவதுடன், பெண்களை இஸ்லாம் துன்புறுத்துவதாகவும் கொச்சைப்படுத்துவதாகவும் பிழையான தரவுகள் பரப்பப்படுகின்றன.
மேலும், சர்வதேச ஊடகங்கள் இதனை திட்டமிட்டுச் செய்கின்றன” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |