பரீட்சை மேற்பார்வை அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை
கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை (G.C.E. A/L) மேற்பார்வை பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உள்ளிட்ட மேற்பார்வை அதிகாரிகளுக்கு அலைபேசி எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பரீட்சைகள் திணைக்களம் இந்த தடையை விதித்துள்ளது.
இதன்படி பரீட்சை மேற்பார்வை கடமையில் ஈடுபட்டுள்ள பரீட்சை நிலைய பொறுப்பதிகாரி தவிர்ந்த ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏனைய அதிகாரிகள் பரீட்சை நிலையத்திற்குள் அலைபேசிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
மேற்பார்வை நடவடிக்கைகள்
பரீட்சை நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பரீட்சை நிலைய மேலதிக பொறுப்பதிகாரி ஆகியவர்களுக்கு மட்டுமே அலைபேசி எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பரீட்சை நடைபெறும் காலத்தில் மேற்பார்வை நடவடிக்கைகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி பரீட்சை மேற்பார்வை பணிகளுக்கு பரீட்சை திணைக்கள அதிகாரிகளுக்கு மேலதிகமாக மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிமனைகளின் அதிகாரிகளும் இணைத்துக்கொள்ளப்பட உள்ளனர்.
ஓர் மேற்பார்வை அதிகாரி 15 நாட்களில் 20 பரீட்சை நிலையங்களை மேற்பார்வை செய்ய வேண்டும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
Bigg Boss: இது உங்க வீடு இல்லை... நீங்க கெஸ்ட் இல்லை! நண்பன் மனைவியிடம் சீறி பாய்ந்த விஜய் சேதுபதி Manithan
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri