கிரிக்கெட் வீரர்கள் தனியார் விமானங்களில் இலங்கைக்கு வருவார்களா..! சபையில் அமைச்சர் பகிரங்க கேள்வி
இலங்கையில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தால் கிரிக்கெட் வீரர்கள் தனியார் விமானங்கள் மூலம் இலங்கைக்கு வரமாட்டார்கள் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், சட்டத்தரணி ஒருவரின் கொலையை அடிப்படையாகக் கொண்டு, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஊடகங்கள் ஒரு கருத்தை உருவாக்க முயற்சிக்கின்றன. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தால், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஐ.சி.சி கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடத்தப்படுமா?
தேசிய பாதுகாப்பிற்கு சிறந்த உத்தரவாதம்
கிரிக்கெட் வீரர்கள் பெரும் தொகைக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளனர். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தால் தனியார் விமானங்கள் மூலம் இலங்கைக்கு வரமாட்டார்கள்.

இந்த போட்டியை காண நாட்டிற்கு வந்தவர்களால் சுற்றுலாப் பயணிகளுக்கு போதுமான ஹோட்டல்கள் இல்லை, மருத்துவமனை அறைகள் கூட எடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் பார்க்கும் போது இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தான் தேசிய பாதுகாப்பிற்கு சிறந்த உத்தரவாதம் என கூறியுள்ளார்.
ரணில் ஆதரவாளரின் சர்ச்சைக்குரிய பதிவு! அநுர அரசின் அதிரடியால் சேமிக்கப்பட்ட 3 கோடிக்கு மேற்பட்ட பணம்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam