அக்கரைப்பற்று முன்னாள் மேயர் அதாஉல்லாவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Crime Law and Order Arrest High Court of Sri Lanka
By Farook Sihan Sep 01, 2026 11:22 PM GMT
Report

பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் மேயர் அகமது செய்யது சக்கி அதாஉல்லாவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 09 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவானது நேற்று(01.09.2026) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதி

கடந்த 19ஆம் திகதி சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை செப்டம்பர் 01ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையிலேயே, அவரின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

தற்போது சந்தேகநபரான சக்கி அதாஉல்லா சுகயீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதனால், அவர் இன்று நீதிமன்றத்தில் நேரடியாக முன்னிலைப்படுத்தப்படவில்லை.

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் அதாஉல்லாவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Akkaraipattu Mayor Chakki Ataullah Remand Extend

இந்த நிலையிலேயே, சிறைச்சாலை அதிகாரிகளின் அறிக்கைகளை பரிசீலித்த நீதிவான், சந்தேகநபரை எதிர்வரும் 09ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளையிட்டுள்ளார்.

அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வராகச் சக்கி அதாஉல்லா பதவி வகித்த காலத்தில், அங்கு கடமையாற்றிய பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த பெண் அரச உத்தியோகத்தர் ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவரைப் பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

வழக்கு பதிவு

குறித்த பெண் சமூக வலைத்தள (Facebook Live) நேரலையினூடாக இந்தக் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தியதை அடுத்து, அம்பாறை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதனிடையே, வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த வேளையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் அதாஉல்லாவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Akkaraipattu Mayor Chakki Ataullah Remand Extend

இதனைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினரால் கடந்த மாதம் 18 ஆம் திகதி அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்போது சந்தேகநபரை ஓகஸ்ட் 19 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பின்னர் ஓகஸ்ட் 19 ஆம் திகதி மீண்டும் முன்னலைப்படுத்தப்பட்ட போது, விளக்கமறியல் செப்டம்பர் 01 வரை நீடிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 3ஆவது முறையாக செப்டம்பர் 09 வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றில் முன்னிலையாகாத பிள்ளையான் - சிறைச்சாலைக்கு சென்ற அழைப்பு..!

நீதிமன்றில் முன்னிலையாகாத பிள்ளையான் - சிறைச்சாலைக்கு சென்ற அழைப்பு..!

கிழக்கு மாகாணசபை தேர்தல் நடைபெற்றால் கட்டாயம் போட்டியிடுவேன்..! முன்னாள் எம்.பி தெரிவிப்பு

கிழக்கு மாகாணசபை தேர்தல் நடைபெற்றால் கட்டாயம் போட்டியிடுவேன்..! முன்னாள் எம்.பி தெரிவிப்பு

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US