ஆளுநராக நியமிக்கப்படும் அகில விராஜ்
ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலருக்கு மாகாண ஆளுநர் பதவிகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரி மாத இறுதியில் மாற்றப்படும் ஆளுநர்கள்
ஐக்கிய தேசியக்கட்சியின் உப தலைவர் அகில விராஜ் காரியவசத்திற்கு மாகாண ஆளுநர் பதவி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. எதிர்வரும் ஜனவரி மாத இறுதியில் மேற்கொள்ளப்பட உள்ள மாகாண ஆளுநர்களின் மாற்றத்தின் போது இந்த நியமனம் வழங்கப்பட உள்ளது.
இவரை தவிர ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, நவீன் திஸாநாயக்க, அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜோன் அமரதுங்க ஆகியோருக்கு ஆளுநர் பதவிகள் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களில் 5 மாகாணங்களின் ஆளுநர் பதவிகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் நான்கு ஆளுநர் பதவிகள் ஐக்கிய தேசியக்கட்சிக்கும் வழங்கப்பட உள்ளன.



