அஜித்திற்காக நீதிகோரி களமிறங்கிய விஜய்
இந்தியா- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலைக்கு நீதி கேட்டு தமிழக வெற்றிக்கழகத்தினால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று(13) நடைபெறும் த.வெ.க. போராட்டத்துக்கு 20 நிபந்தனைகளுடன் பொலிஸார் அனுமதி வழங்கி உள்ளனர்.
தமிழக வெற்றிக்கழ தலைவர் விஜய்
இந்த நிபந்தனை மீறினால் நிர்வாகிகள் மீது நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவலாளி அஜித்குமார் பொலிஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு தமிழக வெற்றிக்கழ தலைவர் விஜய் தலைமையில் சென்னை சிவானந்தா சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது.
அரசியல் கட்சி தொடங்கிய பிறகு முதன்முறையாக போராட்ட களத்திற்கு விஜய் கறுப்பு நிற உடை அணிந்து, பதாகையை ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றார்.
நீதிப் போராட்டம்
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து கட்சி தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.
தமிழக வெற்றிக்கழ போராட்டத்தையொட்டி 100 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மன்னிப்பு கேட்காத அரசு
போராட்டத்தின் போது பேசிய,தமிழக வெற்றிக்கழ தலைவர் விஜய்,
தி.மு.க. ஆட்சியில் பொலிஸாரால் 24 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேரின் குடும்பத்தினருடன் முதலமைச்சர் மன்னிப்பு கேட்பாரா?
திருப்புவனம் அஜித்தை தவிர சிறையில் மரணமடைந்த 24 பேரின் குடும்பத்தினரிடம் முதலமைச்சர் மன்னிப்பு கேட்காதது ஏன்?
அஜித்குமாரை போல மரணமடைந்த 24 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி அளிக்காதது ஏன்? தி.மு.க. அரசு இப்போது sorry-மா மொடல் அரசாக மாறிவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.


