ஜஸ்டிஸ் போர் அஜித்குமார்! தமிழக இளைஞன் மரணத்தில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்
"ஜஸ்டிஸ் போர் அஜித்குமார்" (#JusticeForAjithkumar) என்ற வாசகம் சமூக ஊடகங்களில், குறிப்பாக இந்தியாவின் தமிழ்நாட்டில், பரவலாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு ஹேஷ்டேக் ஆகும்.
இந்த ஹேஷ்டேக்கானது தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் தற்காலிக பாதுகாவலராகப் பணியாற்றிய 28 வயது அஜித்குமார் என்ற இளைஞரின் பொலிஸ் தடுப்பு மரணத்துடன் தொடர்புடையதாகும்.
இது தொடர்பில் தெரியவருகையில்,
பொலிஸ் வன்முறை
அஜித்குமார் என்ற இளைஞன் கோயிலுக்கு வந்த ஒரு பக்தரின் காரில் இருந்த 9.5 பவுன் தங்க நகை மற்றும் பணம் திருடப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பேரில் ஜூன் 28, 2025 அன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைதின் பின்னர் இடம்பெற்ற விசாரணையின்போது அவர் மரணமடைந்துள்ளார்.
இதன்படி குறித்த இளைஞன் பொலிஸாரால் தாக்கப்படும் காணொளியொன்றும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குறித்த மரணம் பொலிஸ் வன்முறை மற்றும் துன்புறுத்தல் காரணமாக இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் பொதுமக்கள் மற்றும் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்(AIADMK), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(cpi) மற்றும், பாரதிய ஜனதா கட்சி(BJP) உள்ளிட்ட கட்சிகள் இந்த மரணத்தைக் கண்டித்து, நீதி விசாரணை, இழப்பீடு, மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றன.
"ஜஸ்டிஸ் பார் அஜித்குமார்" என்ற ஹேஷ்டேக், அஜித்குமாரின் மரணத்திற்கு நீதி கோருவதற்காகவும், பொலிஸ் முறைகேடுகள் மற்றும் தமிழ்நாட்டில் பொலிஸ் தடுப்பு மரணங்களுக்கு எதிராகவும் ஒரு டிஜிட்டல் பிரச்சாரமாக உருவாகியுள்ளது.
நீதிமன்ற விசாரணை
இந்நிலையில் இது தொடர்பான நீதிமன்ற விசாரணையில், , அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் அஜித்குமார் தீவிரவாதியா என்று கேள்வியெழுப்பப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
மேலும் விசாரணையை முன்னெடுத்த இந்திய உயர்நீதிமன்றின் மதுரை கிளை, தமிழ்நாட்டில் 24 விசாரணை மரணங்கள் நிகழ்ந்தது பற்றி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் உயிரிழந்தது தொடர்பாக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் சுப்பிரமணியம், மரியா கிளீட் அமர்வு முன்பு சட்டத்தரணிகள் அருண், சுவாமிநாதன் உள்ளிட்டோர் முறையிட்டனர்.
இதன்போது ஆளும் கட்சியினர் தலையீட்டால், பெற்றோரின் சம்மதமின்றி பொலிஸாரே அஜித்தின் உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்துவிட்டதாக சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
உயிரிழந்த அஜித்தை, கடுமையாக தாக்கிய பொலிஸார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, விரைவில் நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.
அடித்துக் கொல்லப்பட்ட நபர்
மேலும், இதுதொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனைக் விசாரித்த நீதிபதிகள், அடித்துக் கொல்லப்பட்ட நபர் தீவிரவாதியா என்றும், அவரை ஏன் அடித்து கொலை செய்துள்ளீர்கள் என்றும் கேள்வியெழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு சாதாரண வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை அவரிடம் எந்த ஆயுதமும் இல்லாத பட்சத்தில் இதுபோன்று தாக்குதல் நடத்தியது ஏன் என்றும் வினவியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஐந்து பொலிஸார் கைது செய்யப்பட்டுடுள்ளதோடு ஆறு பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் வழக்கு தமிழ்நாட்டு குற்றப்புலனாய்வுத் துறைக்கு (CB-CID) மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
காணொளி - Justice-for-ajithkumar

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
