நாட்டு மக்களுக்கு இன்றைய தினம் விசேட விளக்கம் அளிக்கவுள்ள கப்ரால்
நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்து மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் இன்றையதினம் விசேட விளக்கமளிக்கவுள்ளார்.
இன்றையதினம் காலை 09.30 மணியளவில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் ஊடாக மத்திய வங்கியின் ஆளுநர் இதுகுறித்து தெளிவுப்படுத்துவார்.
அதன்படி, இந்த ஆண்டு இலங்கைப் பொருளாதாரம் எதிர்நோக்கும் குறுகிய கால மற்றும் நீண்ட கால சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து இங்கு விளக்கப்படும்.
இந்நிலையில் ஏற்கனவே பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள 500 மில்லியன் டொலர் கடன்களை செலுத்துவதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் , அதற்கான பலம் தம்மிடம் காணப்படுவதாகவும் அரசாங்கம் மீண்டும் அறிவித்துள்ளது.
மூன்றாம் தரப்பு தலையிடக்கூடாது! - மகிந்தவிடம் சீனா முன்வைத்த கோரிக்கை (பத்திரிக்கை கண்ணோட்டம்) |
