மக்காவில் வான்வழித் தாக்குதல் - குடியிருப்பாளர்களுக்கு அவசர எச்சரிக்கை
இஸ்லாமியப் புனித நகரமான மக்காவில் வான்வழித் தாக்குதல் இடம்பெறவுள்ளதாகத் தெரிவித்து, சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்பு அமைப்பு அவசரகால எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுபோன்ற ஒரு சம்பவம் வரலாற்றில் முதல் தடவையாக இடம்பெறுகின்றது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆபத்து நீங்கும் வரை, குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான வீடுகளின் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும், கதவுகளிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
ஜித்தா மற்றும் தாயிஃப் ஆளுநரகங்களுக்கும் இதேபோன்ற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. சில நிமிடங்களிலேயே இந்த எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்டது.

ஆனால், ஈரான் ஆதரவு ஹூதி குழுவிடமிருந்து சவூதி அரேபியா ஒரு விரிவான பாதுகாப்புச் சவாலை எதிர்கொண்டுள்ள வேளையில் இது நிகழ்ந்துள்ளது.
அந்தக் குழு, சவூதி அரேபியா மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியதோடு, யேமனின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த செங்கடல் கடற்கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிரிலிய சவிய கணக்கு சர்ச்சை - ஒரு ரூபாய் கூட எடுக்கவில்லையாம்! மொட்டுக்கட்சி அம்பலப்படுத்திய உண்மை..