180 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைய்னுடன் துனீசிய குடிமகன் கைது
சுமாா் 180 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைய்ன் போதைப்பொருளுடன் துனீசிய குடிமகன் ஒருவர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
59 வயதான அவர், தனது பயணப் பொதியில் 4 கிலோகிராம் 527 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச நிதி நிறுவனமொன்றின் தலைவராகக் காட்டிக் கொண்டு அவர் இலங்கை வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவா், துனீசியாவில் இருந்து பிரேசில் சென்று அங்கிருந்து தோஹாவிற்கு சென்று பின்னர் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் பயணியொருவரால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட, அதிகூடிய கொக்கேயின் தொகை இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொக்கெய்னுடன் சந்தேகநபா் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவில் கையளிக்கப்பட்டுள்ளாா்