தீவிரமடையும் பதற்றத்தினால் மூடப்பட்டுள்ள வான்பரப்புகள்! நூற்றுக்கணக்கான விமானங்கள் தொடர்ச்சியாக இரத்து
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதால், உலகளாவிய விமானப்போக்குவரத்துத்துறை கடுமையான நெருக்கடியில் இருப்பதாக கூறப்படுகிறது.
துபாய், தோஹா மற்றும் அபுதாபி போன்ற முக்கிய மத்திய கிழக்கு விமான மையங்கள் மூடப்பட்டதன் காரணமாக பல சர்வதேச விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
விமான அட்டவணைகளில் கணிசமான மாற்றம்
இதன் காரணமாக பல விமான நிறுவனங்கள் விமான அட்டவணைகளில் கணிசமான மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, ஏர் கனடா: டெல் அவிவ் மற்றும் துபாய்க்கான அனைத்து விமானங்களும் செப்டம்பர் 7 வரை இரத்து செய்யப்பட்டுள்ளன.
ஏர் பிரான்ஸ் / கேஎல்எம்: ஏர் பிரான்ஸ், பெய்ரூட் மற்றும் டெல் அவிவ்வுக்கான விமானங்களை ஏப்ரல் 4 வரையிலும், துபாய் மற்றும் ரியாத்துக்கான விமானங்களை மார்ச் 31 வரையிலும் இரத்து செய்துள்ளது.
கேஎல்எம், டெல் அவிவ், ரியாத் மற்றும் துபாய்க்கான விமானங்களை மே 17 வரை நிறுத்தி வைத்துள்ளது. டெல்டா: நியூயார்க்-டெல் அவிவ் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் அட்லாண்டாவிலிருந்து வரும் விமானங்கள் செப்டம்பர் 5 வரை தாமதப்படுத்தப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான பயணிகள் தவிப்பு
எமிரேட்ஸ்: பிராந்திய வான்வெளி பகுதியளவு மீண்டும் திறக்கப்படுவதால், ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான நிறுவனம் குறைந்த எண்ணிக்கையிலான விமானங்களை இயக்கும் என்று கூறியுள்ளது.
லுஃப்தான்சா குழுமம்: லுஃப்தான்சா, ஸ்விஸ், ஆஸ்திரியன் மற்றும் பிரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள், துபாய் மற்றும் டெல் அவிவ் நகரங்களுக்கான விமான சேவைகளை மே 31 வரை நிறுத்தி வைத்துள்ளன.
டெஹ்ரான், மஸ்கட் மற்றும் ரியாத் உள்ளிட்ட பிற நகரங்களுக்கான விமான சேவைகள் அக்டோபர் 24 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கத்தார் ஏர்வேஸ்: தோஹாவிலிருந்து 90 இடங்கள் வரையிலான விமான சேவைகளை படிப்படியாக அதிகரிக்கப்போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
துருக்கிய ஏர்லைன்ஸ்: துருக்கி, மத்திய கிழக்கில் உள்ள பெரும்பாலான விமான சேவைகளை மார்ச் இறுதி வரை இரத்து செய்துள்ளது.
இந்த போர் சூழ்நிலை காரணமாக, உலகெங்கிலும் உள்ள விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் தங்கள் இடங்களுக்குப் பயணிக்க முடியாமல் தவிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri