திடீரென பல மடங்கு உயர்வை எட்டிய இலங்கைக்கான விமானக் கட்டணங்கள்
இலங்கைக்கு செல்லும் விமானக் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீண்ட இழுபறிக்குப் பிறகு, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட பாகிஸ்தான் அரசு தனது அணிக்கு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், இவ்விடயமானது, கிரிக்கெட் விளையாட்டின் மாண்பைக் காத்துள்ளதாக பலராலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசின் தீர்மானம்
இந்த அறிவிப்பு வெளியானவுடன், இலங்கைக்கு செல்லும் விமானக் கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன.

மும்பை மற்றும் சென்னையில் இருந்து கொழும்பு செல்லும் விமானக் கட்டணங்கள் வழக்கத்தை விட 3 மடங்கு அதிகரித்துள்ளன.
வெறும் 1 மணிநேரம் 20 நிமிட பயணமாக இருந்தாலும், சென்னை ரசிகர்களிடையே நிலவும் அதீத தேவையால் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளிலிருந்து கொழும்பு வரும் விமானக் கட்டணங்களும் உயர்ந்துள்ளன.
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan