அரச நிறுவனங்களின் உயர் பதவிகளில் அதிரடி மாற்றம்! விரைவில் வெளியாகவுள்ள புதிய அறிவி்ப்பு
அரச நிறுவனங்களில் பல உயர் பதவிகளில் விரைவில் மாற்றம் ஏற்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டார்.
புதிய நியமனங்கள் குறித்த விபரங்கள்
பல அரச நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர் சபைகள் மற்றும் நிறுவனத் தலைவர்களை விரைவில் மாற்றுவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களின் வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த மாற்றங்கள் மற்றும் புதிய நியமனங்கள் குறித்த விபரங்கள் மிக விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
எனவே, நிர்வாகக் கட்டமைப்பை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமையவுள்ளது.