லண்டனில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானம்: பயணிகளுக்கு உடல்நலக் குறைபாடு
லண்டனில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா போயிங் விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையிலே, குறித்த விமானத்தில் பயணித்த பயணிகள், விமான சிப்பந்திகளுக்கு தலைச்சுற்று,வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.
விமானத்தில் ஒட்சிசன் குறைபாடு ஏற்பட்டு இருக்கலாம் என்று ஆரம்ப கட்டத்தில் சந்தேகம் எழுந்தது. ஆனால் குறித்த விமானத்தில் அது போன்ற ஒட்சிசன் குறைபாடு இல்லை என்று தெரிய வந்துள்ளது.
உடல்நலக் குறைபாடு
இதனையடுத்து, விமானம் தரையிறங்கியதும் விமான நிலையத்தில் தயாராக நின்ற மருத்துவ குழு பயணிகளுக்கு தேவையான சிகிச்சையை வழங்கியுள்ளனர்.
இது குறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், ''விமானத்தில் பயணிகளுக்கு ஏற்பட்ட அசெளகரியம் குறித்து விசாரித்து வருகிறோம்'' என்று குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய மக்கள் அச்சம் அடைய ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
