திடீரென்று இரத்து செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானம்!
இந்தியாவிலிருந்து லண்டன் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று இன்றையதினம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப சிக்கல் காரணமாக இந்த விமானம் இரத்துச் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அகமதாபத்தில் இருந்து லண்டன் சென்ற விமானம் கடந்த வாரம் விபத்திற்குள்ளானதன் பின்னர், அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்படவிருந்து முதலாவது விமானம் இதுவாகும்.
விமானத்தில் தொழில்நுட்ப சிக்கல்
எனினும், தொழிநுட்ப கோளாறு காரணமாக இறுதி நேரத்தில் விமானம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இதனால் முன்பதிவு செய்திருந்த பல பயணிகள் கடுமையான பாதிப்பை எதிரநோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றனது.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, பொதுவான பராமரிப்புப் பரிசோதனையின் போது, குறித்த விமானத்தில் தொழில்நுட்ப சிக்கல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், எனவே Boeing 787-8 Dreamliner என்ற குறித்த விமானம் பயணத்தில் இருந்து இரத்துச் செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
ஏர் இந்தியா விமானம்
கடந்த வாரம் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்துக்கு பிறகு, ஏர் இந்தியா நிறுவனத்தின் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

மும்பை–அகமதாபாத் இடையிலான AI12493 விமானம், இயக்க சிக்கலால் இரத்துச் செய்யப்பட்டது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் டெல்லி–ராஞ்சி விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தின் பின்னர், தொழில்நுட்ப கேளாறு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தினால் மீண்டும் டெல்லிக்கு திரும்பியது.
மேலும், ஒரு British Airways Boeing 787-8 Dreamliner விமானம், அகமதாபாத் விமான விபத்து இடம்பெற்ற இரண்டு நாட்களின் பின்னர், தொழில்நுட்ப சிக்கல் ஒன்றினால் ஹீத்ரோ விமான நிலையத்திற்குத் திரும்பியது.
சென்னை செல்லவிருந்த அந்த விமானம், புறப்பட்டு ஒரு மணி நேரத்திற்குள் மீண்டும் தரையிறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan