சீரற்ற வானிலை காரணமாக தப்போவ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு
சீரற்ற வானிலைக் காரணமாக புத்தளம் - தப்போவ நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் 6 அங்குலம் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டமையினால் நீர்த்தேக்கத்தை அண்டிய தாழ் நிலப் பகுதிகளில் வாழும் மக்களை மிக அவதானமாக செயற்படுமாறு இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில்உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, கடும் மழை மற்றும் காற்றுடனான சீரற்ற காலநிலை தொடர்ந்து நீடித்து வருகின்றது.
இதேவேளை, இலங்கையின் பதுளை, கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri

பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
