கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் ஐம்பொன் நகைகள் திருட்டு (Photo)
யாழ்ப்பபாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் கப்பலேந்தி மாதாவுக்கு அணிவிக்கப்பட்ட ஐம்பொன்னாலான நகைகள் திருடப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
ஆலயத்தின் வருடாந்த பெருவிழா கடந்த 14ஆம் திகதி மற்றும் 15ஆம் திகதிகளில் இடம்பெற்றுள்ளன. எனவே இந்த பெருவிழாவிற்கு அதிகளவான பக்தர்கள் இரு தினங்களிலும் கூடியிருந்தனர்.

| தமிழர் பகுதியில் அதிகரிக்கும் திருட்டுச் சம்பவங்கள் (Photos) |
திருட்டு சம்பவம் தொடர்பில் முறைப்பாடு
இந்த நிலையில் நேற்று மதியம் சரியாக 1.30 மணியளவில் கப்பலேந்தி மாதாவை அவதானித்த பக்தர்கள் மற்றும் நிர்வாகிகள் நகைகள் திருட்டுப்போயுள்ளதை அவதானித்துள்ளனர்.
இந்த திருட்டு சம்பவம் தெடர்பில் ஆலய குரு முதல்வருக்கு அறிவிக்கப்பட்டு மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்ட்டுள்ளது.
இது தொடர்பான விசரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam