சந்நிதியான் ஆச்சிரமத்தால் கதிர்காம பாத யாத்திரையினருக்கு ஒரு மில்லியன் நிதியில் உதவிகள்
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் கதிர்காம பாதயாத்திரை செல்லும் அடியவர்களுக்கு அம்பாறை மாவட்டம் குமண வனவிலங்கு சரணாலயத்தின் தொடக்க எல்லையில், அடர்ந்த வனத்திற்குள் அமைந்துள்ள உகந்தை முருகன் ஆலயத்தில் வைத்து, ரூபா ஒரு மில்லியன் பெறுமதியான அத்தியாவசியமான உணவுப்பொருட்களை 48ஆவது நாளாக சந்நிதியிலிருந்து பாத யாத்திரை செல்லும் 150 பேருக்குமே பொறிகள் வழங்கிவைக்கப்பட்டன.
குறித்த பாத யாத்திரிகர்கள் பானம கிராமம், குமண, யால தேசிய பூங்கா போன்ற இடங்களை கடந்து சுமார் 10 நாட்கள் கடினமான வனப்பகுதியை கடந்தே முகாம்கள் அமைக்கப்பட்டு தங்கி பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
இதேவேளை, அவர்களுக்காக நீர் விநியோகம் மற்றும் அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மோகனதாஸ் சுவாமிகள்
குறித்த உதவிகளை ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
