அஹுங்கல்ல துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் கைது - கைத்துப்பாக்கியும் மீட்பு
காலி - அஹுங்கல்லையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று(04.10.2026) இடம்பெற்றுள்ளது.
அஹுங்கல்லை- கல்வெஹரை பகுதியில் அதிகாலை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.
74 வயது முதியவர் படுகாயம்
இதன்போது, ல்வெஹெரை பகுதியைச் சேர்ந்த 74 வயது நபர் காயமடைந்து, பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டிருந்தார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர், சந்தேகத்தின் பேரில் காலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடற்றொழிலில் ஈடுபடும் 26 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி அவரது உறவினர் வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இந்தியாவிலேயே மிகவும் அசுத்தமான ரயில் நிலையம் தமிழகத்தில் தான் உள்ளது.., எது தெரியுமா? News Lankasri