உலகை அதிர வைத்த விமான விபத்து! இலங்கை வந்து திரும்பிய வைத்திய தம்பதிகள் பலி
நேற்றையதினம்(12) ஏர் இந்திய விமானம் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் அதனை தொடர்ந்து பல்வேறுப்பட்ட அதிர்ச்சி தகவல்கள் வெளிவருகின்றன.
வெடித்து சிதறிய விமானத்தின் விமானி அகமதாபாத்திலுள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளருக்கு மேடே அழைப்பு விடுத்துள்ளார்.
மேடே (Mayday call) அழைப்பு என்பது விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் சூழல்களில் ஏதேனும் ஆபத்து ஏற்படவுள்ள சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அவசரகால பேரிடர் சமிக்ஞையாகும்.
விபத்திற்கு முன்னதாக பயணியொருவர் விமானம் பற்றி ஒரு காணொளியொன்றையும் வெளியிட்டுள்ளார்.
விமானத்தில் பயணித்த ஒருவர் அதிலிருந்து தப்பித்து ஓடிவந்துள்ளார். அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
இன்னுமொரு பெண் விமானத்தை தவறவிட்டுள்ள நிலையில் இந்த விபத்திலிருந்து தப்பித்துள்ளார்.
இந்த நிலையில் பிரதிக் ஜோஷி என்ற மென்பொருள் நிபுணரின் குடும்பத்தினர், இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் இலங்கைக்கு வருகை தந்து தலதா மாளிகையை தரிசித்து சென்றதாகவும் கூறப்படுகின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri