இலங்கை வரலாற்றில் முதல்முறையாக 12 பயிர்களுக்கு விவசாய மானியம்
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக 12 உணவுப் பயிர்களுக்காக விவசாய மானியம் வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக விவசாயப் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த எந்தவொரு அரசாங்கமும் வழங்காத வகையிலான அதிமேலதிகத் தொகையை தற்போதைய அரசாங்கம் விவசாயிகளுக்கான பயிர்ச்செய்கை மானியமாக வழங்கும் நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்துச் செயல்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் ஆட்சியைக் பொறுப்பேற்ற போது வழங்கப்பட்ட மானியத் தொகையை தற்போது இருமடங்காக உயர்த்தியுள்ளோம்.
மானியத் தொகை
நெற்செய்கைக்கு மேலதிகமாக மேலும் 12 பயிர்கள் சேர்க்கப்பட்டு, நெல்லுடன் சேர்த்து மொத்தம் 13 பயிர்களுக்கு இந்த மானியம் வழங்கப்படுகிறது.
நெல் விவசாயம் செய்யப்படும் நிலங்களில் மேலதிகப் பயிர்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும், நெற்செய்கைக்கு வழங்கப்படும் அதே மானியத் தொகை வரலாற்றில் முதல்முறையாக வழங்கப்படவுள்ளது.

கடந்த காலங்களில் எந்தவொரு அரசாங்கமும் வழங்கிராத வகையில், தற்போதைய அரசாங்கம் விவசாயிகளுக்குப் பயிர்ச்செய்கை மானியமாகப் பெருந்தொகை நிதியை ஒதுக்கி, அதனை வழங்கும் பணிகளைத் தற்போது முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan