சீரற்ற காலநிலை காரணமாக மன்னாரில் விவசாய செய்கை பாதிப்பு
மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக நிலவி வந்த சீரற்ற காலநிலை காரணமாகவும் அதிக மழை காரணமாகவும் 7603 ஹெக்டேர் விவசாய செய்கை அழிவடைந்துள்ளதாக மன்னார் மாவட்ட கமநல சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் இலுப்பைகடவை கமநல சேவை நிலையத்திற்கு உட்பட்ட 1100 ஹெக்டேர் விவசாய நிலங்களும் மாந்தை பகுதியில் 1168, நானாட்டான் 768 ஹெக்டேயருமாக ஒட்டு மொத்தமாக 7603 ஹெக்டேர் விவசாய செய்கை அழிவடைந்துள்ளன.
இம்முறை மன்னார் மாவட்டத்தில் காலபோக செய்கைக்கு என 11776 ஹெக்டேர் விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், 4173 ஹெக்டேர் விவசாய செய்கை மாத்திரம் தற்போது பகுதியளவில் காப்பாற்றப்பட்டுள்ளன.

கடன் தள்ளுபடி
இந்தநிலையில், இம்முறை விவசாய செய்கைக்காக பல விவசாயிகள் அரச மற்றும் தனியார் வங்கிகளிலும், கிராம மட்ட அமைப்புகளிடமும் கடன்களை பெற்றுள்ள நிலையில், அவற்றை மனிதாபிமான அடிப்படையில் அரசாங்கம் தள்ளுபடி செய்து தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri