ஒரே நாடு ஒரே சட்டம்! - மூன்று தமிழர்களை செயலணியில் இணைத்துக்கொள்ள ஜனாதிபதி இணக்கம்
ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் மூன்று தமிழர்களை இணைத்துக்கொள்ள ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் போது, ஜனாதிபதி இதற்கான இணக்கத்தை வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் செந்தில் தொண்டமான் இதனை கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மூன்று தமிழர்களை இணைத்துக்கொள்ள ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவராக கலகொடஅத்தே ஞானசேர தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், செயலணியின் உறுப்பினர்களாக 4 முஸ்லிம்கள் மற்றும் 9 சிங்களவர்களின் பெயர்கள் வர்த்தமானியின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஆளும் கட்சியிலுள்ள தமிழ் பங்காளி கட்சிகள் இதற்கான அனுமதியை கோரிய பின்னணியில், ஜனாதிபதி அதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் இல்லை, அசுரன் படத்தில் நான் நடித்திருக்கனும், விட்டுக்கொடுத்துட்டேன்.. சொன்னது யார் பாருங்க Cineulagam
தலைநகரம் பாதுகாப்பாக இல்லை! லண்டனுக்கு இராணுவத்தை அனுப்ப வேண்டிய நேரமிது - நாதிம் ஜஹாவி News Lankasri
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan