கொழும்பின் புறநகர் பகுதிகளில் 24 மணித்தியாலங்கள் நீர்வெட்டு
கொழும்பின் புறநகர் பகுதிகளில் இன்று (24.06.2026) இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை 24 மணித்தியால நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதன்டி, பாதுக்கை, ஹோமாகம, கொட்டாவை, பன்னிப்பிட்டி மற்றும் பெலன்வத்தை ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்
அதேவேளை, மகரகம பகுதிக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் முன்னெடுக்கப்படும் என்றும் நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

கலாதுவாவவிலிருந்து பொரலத்கமுவ வரை நீர் விநியோகிக்கும் பிரதான நீர் விநியோக குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாகவே இந்த நீர் விநியோகத்தடை ஏற்படுத்தப்படுகின்றது என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.