இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை
இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள் தொடர்பான இருதரப்பு திருத்த உடன்படிக்கைகள், இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய ஏற்றுமதி - இறக்குமதி வங்கிக்கும் இடையே கையெழுத்தாகியுள்ளன.
இந்திய அரசாங்கத்துடன் மறுசீரமைக்கப்பட்ட ஏழு கடன் வரி மற்றும் நான்கு கொள்வனவாளர்களின் கடன் வசதி ஒப்பந்தங்களின் மொத்த தொகை, 930.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம், தற்போதைய வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பாக, இருதரப்பு திருத்த ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பின் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று கூறியுள்ளது.
நிதி அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ள விடயம்
பிரான்ஸ் மற்றும் ஜப்பானுடன் இணைந்து அதிகாரப்பூர்வ கடன் வழங்குநர் குழுவுக்கு தலைமை தாங்கி, இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையை முன்னெடுப்பதில் இந்திய அரசு முக்கிய பங்கு வகித்துள்ளது என்று நிதி அமைச்சகம் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
நெருக்கடியின் உச்சக்கட்டத்தின் போது தேவைப்படும் அவசர உதவியின் ஆதரவுடன் இந்திய அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு மற்றும் ஆக்கபூர்வமான ஈடுபாடு ஆகியவை பொருளாதார மீட்சியின் சவால்களை இலங்கை எதிர்கொள்ளவும், கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவும் உதவியாக இருந்தன என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் கே.எம்.மஹிந்த சிறிவர்தன ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார், இந்திய எக்ஸிம் வங்கியின் பொது மேலாளர் நிர்மித் வேத் கடன் வரியில் கையெழுத்திட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 8 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
