திருகோணமலையில் சுற்றுலாத் துறையை விரிவுபடுத்துவது தொடர்பில் இந்தியாவுடன் ஒப்பந்தம்
தமிழ் நாட்டில் எதிர்வரும் மாதம் வர்த்தக உடன்படிக்கை ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடவுள்ளதாக திருகோணமலை மாவட்ட வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் கே.குலதீபன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நேற்று(06.07.2026) மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தக உடன்படிக்கை ஒப்பந்தம்
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அண்மையில் எமது வர்த்தக சம்மேளனப் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கிருக்கும் இலங்கை இந்திய வர்த்தக அமைப்புக்கள் ஊடாக நான்கு அமைப்புக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளோம்.
இதன் மூலம் திருகோணமலை மாவட்டத்தில் தற்போது முதன்மையாகவுள்ள சுற்றுலாத் துறையை விருத்தி செய்யவும் எதிர்பார்ப்பாக உள்ளது.

திருகோணமலை மாவட்டத்தை பொருத்தமட்டில் எமது சம்மேளன் பெண்களுக்கான துறை, சுற்றுலா துறை மற்றும் இளம் உற்பத்தி வர்த்தகம் என மூன்று துறைகளை உள்ளடக்கியுள்ளது.
இவ்வாறான நிலையில் எதிர்காலத்திலும் இந்திய போன்ற நாடுகளின் வர்த்தக உடன்படிக்கை மூலமாக முதலீட்டு வாய்ப்புக்களை அதிகரித்து வேலை வாய்ப்பு உள்ளிட்ட மூலதனம் ஊடாகவும் அபிவிருத்திக்கு இட்டுச் செல்ல முடியும்.
ஒப்பந்தம் மூலமான முதலீடு
தற்போதைய அரசாங்கம் கடந்த கால அரசாங்கத்தை விடவும் நாட்டை அபிவிருத்தி செய்து வருகிறது. இது போன்று எமது வர்த்தக சம்மேளனத்துக்கும் நிதி மூலம் மட்டுமல்லாது ஏனைய ஒத்துழைப்புக்களை வழங்க முன்வர வேண்டும்.
இதனால் கிழக்கு மாகாணத்தில் வரலாறு காணாத முதலீடுகளை உருவாக்க முடியும் இதற்காக அரச துறையில் கிழக்கு மாகாண ஆளுனர், பிரதம செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான அரச துறை சார்ந்த வர்த்த அமைப்புக்கான பொறிமுறையை உருவாக்க வேண்டும்.

ஒட்டுமொத்தமாக இந்திய துனை தூதுவர் சென்னையில் எதிர்வரும் மாதமளவில் அனைத்து ட்ரவலின் ஏர்ஜன்களுடைய பிரதிநிதிகள் ஊடான சந்திப்பை ஏற்படுத்தவும் வர்த்தக ஒப்பந்தம் மூலமான முதலீடுகளை மேற்கொள்ள குறித்த சந்திப்பு இடம் பெறவுள்ளது.
மேலும் இலங்கை அரசாங்கத்தின் உதவியுடன் இந்தியாவின் புதியதொரு திட்டமாக பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான 5555 அங்கத்தவர்களை இணைத்து செயற்பட கூடிய வாய்ப்பும் வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.